யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்! குளியலறைக்குள் மர்மநபர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் நகை மற்றும் பணம் என்பனவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அரசாங்க ஊழியர்களான கணவன் மற்றும் மனைவியை கடுமையாக தாக்கிய நிலையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருடர்களின் தாக்குதல் காரணமாக காயமடைந்த மனைவிக்கு 6 தையல் போடப்பட்டுள்ளது. கணவனின் தலையில் தாக்கப்பட்டமையால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கட்டுவன் புலம் வீதி, கட்டுவன் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

வீட்டின் குளியலறை ஜன்னல் ஊடாக வீட்டுக்குள் 3 கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். நித்திரையில் இருந்த வீட்டாரை எழுப்பி, அவர்களைக் கத்தி முனையில் அச்சுறுத்தியுள்ளனர்.

வீட்டை சல்லடை போட்டு தேடிய திருடர்கள், தாலிக் கொடி, காப்பு, சங்கிலி உள்பட 17 பவுண் நகை, 20 ஆயிரம் ரூபா பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலையில் உப அதிபராகக் கடமையாற்றுபவருடைய வீட்டிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அவரது மனைவி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்றார்.

சம்பவம் தொடர்பில் குற்றத் தடவயவியல் பொலிஸார் மோப்ப நாய்களுடன் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.