இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் திருகோணமலையில் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

இந்திய மீனவர்கள் ஏழு பேர் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திருகோணமலை, புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, ஏழு மீனவர்களுடன் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியா, டாடாநகர் நாகபட்டினம் பகுதியை சேர்ந்த 17, 25, 27, 30 மற்றும் 41 வயதுடையவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதோடு விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers