டைனமைட் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டி பகுதியில் டைனமைட் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு பேரில் மூன்று பேர் தப்பியோடிய நிலையில் நேற்று மாலை ஒருவரை கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மூதூர் - பாலநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

262 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டதுடன், லொறியொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் மூன்று பேர் தப்பியோடிய நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை மீன் பிடிப்பதற்காக மறைத்து வைத்திருந்த டைனமைட் 18 டெட்டனேட்டர் 06 கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றையதினம் மூதூர் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.