திருகோணமலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் மாதாந்த அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலையின் முன்றலில் திருகோணமலை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வா தலைமையில் இன்று இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இவ் அணிவகுப்பு மரியாதையில் அறுபதிற்கும் மேற்பட்ட சகல தரத்திலும் உள்ளோர் பங்குபற்றியுள்ளனர்.
இதன் போது சிறப்பாக சீருடை, பாதணி மற்றும் பட்டிகள் அணிந்திருந்த மூவர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.