மதுஷ் இருந்த ஹோட்டல் தொடர்பில் துபாய் பொலிஸுக்கு தகவல் கொடுத்தது யார்? கசிந்துள்ள தகவல்

Report Print Ajith Ajith in சமூகம்

மதுஷ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அவர்களுடன் தொடர்புடைய துபாயில் உள்ளவர்கள் மத்தியில் ஏற்பட்ட முறுகலே காரணம் என்று தெரியவந்துள்ளது.

மாகந்துரே மதுஷ் என்ற சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்சித்த துபாயில் உள்ள அல் மரீனா ஹோட்டலில் வைத்து 25 பேர் சகிதம் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

மெரில் என்ற போதைவஸ்து கடத்தல்காரர் ஒருவரின் நலன்புரி தொடர்பில் ஏற்கனவே மதுஷுக்கும், மெரிலுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

ஏற்கனவே ஒரு வருடத்துக்கு முன்னர் குறித்த கடத்தல்காரரை மதுஷ் துப்பாக்கியால் சுட்டபோது அவர் அதில் இருந்து தப்பிவிட்டார்.

இந்தநிலையில் அவரே, கடந்த செவ்வாய்க்கிழமையன்று மதுஷ் இருந்த ஹோட்டல் தொடர்பில் துபாய் பொலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மதுஷ் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மெரில் தமது ஸ்மார்ட் தொலைபேசி ஊடாக இலங்கையின் தலவத்துக்கொடயில் உள்ள நண்பருக்கு அனுப்பியுள்ளார்.

இதன்பின்னரே அந்த புகைப்படம் விசேட அதிரடிப்படையினருக்கு பகிரப்பட்டுள்ளது.