மதுஷின் நண்பர் இன்று கொழும்பில் வைத்து கைது

Report Print Ajith Ajith in சமூகம்

துபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷின் நண்பர் ஒருவர் இன்று கொழும்பு - 15, மட்டக்குளிய, மாதம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தரேவத்த சாமர என்ற இவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து 5 கிராம் ஹெரோய்ன் மற்றும் கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தநிலையில் அவர் திட்டமிட்ட குற்றச்செயல்களை விசாரணை செய்யும் பொலிஸ்பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

Latest Offers