மாகந்துரே மதுஷ் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல உதவியதாக கூறப்படும் சிவா என்ற நபருக்கு சொந்தமாக கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இருக்கும் வீட்டை விசேட அதிரடிப்படையினர் இன்று சோதனையிட்டுள்ளனர்.
அதிரடிப்படையினர் சோதனையிட்ட போது தேடப்படும் சிவா என்பவர் வீட்டில் இருக்கவில்லை என தெரியவருகிறது. சிவா என்ற இந்த நபர், மாகந்துரே மதுஷ் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவிய நபர் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனிடையே மாகந்துரே மதுஷக்கு நெருக்கமான நபர் என கூறப்படும் அந்தரேவத்தே சாமர என்ற நபர், மட்டக்குளி, மாதம்பிட்டி பகுதியில், விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ஒரு கைக்குண்டு மற்றும் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.