புதையல் எடுக்கச் சென்றவர்கள் என்ற சந்தேகத்தில் 9 பேர் கைது

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில் புதையல் எடுக்கச் சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 9 பேரை வெல்லாவெளிப் பொலிசார் இன்று மாலை அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

இவ்வாறு அழைத்துச் சென்றவர்களில் 8 பேர் சிங்களவர்கள் எனவும் ஒருவர் தமிழர் எனவும், சிங்களவர்களில் 5 பேர் கொழும்பை சேர்ந்தவர்களாகவும், 3 பேர் அம்பாறைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர்.

விவேகானந்தபுரம் கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெல்லாவெளிப் பொலிசார் இவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் இதன்போது அவர்கள் வசமிருந்த வெங்கல வாள் 01, இரும்பு வாள் 01, சாட்டைக்கயிறு 01, திரிசூலம் 01, சிவலிங்கம் 01, நாகபாம்பு சிலை 02, சொகுசு வாகனம் 01, ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளிப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.