தாய்ப்பால் புரைக்கேறியதில் ஒரு மாதக் குழந்தை உயிரிழப்பு : சோகத்தில் குடும்பம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - சாம்பல் தோட்டம் பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறியதில் ஒரு மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பம் ஒன்றின் ஒரு மாதக் குழந்தை பாலுக்கு அழுத நிலையில் தாய்ப் பாலினை ஊட்டியுள்ளார்.

இதன் போது தாய்ப்பால் புரைக்கேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ரங்கநாதன் ரவீன் என்கின்ற ஒரு மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தைமை குறிப்பிடத்தக்கது.