மட்டக்களப்பு விவசாயிகளின் அவல நிலை

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெய்துவரும் மழையினால் அதிகளவு நெல் வயல்கள் மழை நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரும்போக அறுவடை ஆரம்மித்த முற்பகுதியிலே கனழமை பெய்ததனால் அறுவடை செய்த நெல் விற்க முடியாமலும், உணவுக்குப் பயன்படுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

எது எவ்வாறாயினும் அறக்கொட்டித்தாக்கத்திலிருந்து மிஞ்சிய வேளாண்மையை அறுவடை செய்யும் வேலையில் கனமழை பெய்து அழித்திவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பெருமூச்ச விடுகின்றனர்.

இவ்வாறு பாதிகக்கப்பட்டுள்ள தக்கு அரசாங்கம் நட்டஈடுகளைப் தந்துதவவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசயாகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ்வாறு பாதிப்படைந்துள்ள விவசாயிகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், இதுவரையில் இவ்வாறு எத்தனை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விடையம் முழுமையாக தமக்கு கிடைக்கப்பெறவில்லை. இவை கிடைக்கப்பெற்றதும் மேற்கொண்டு உரியை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவித்தி உதவி ஆளையார் அலுவலகம் தெரிவித்துள்ளது.