சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டயகம சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் என்.கரணாநிதி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இப் பாடசாலை கட்டடத்தை அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் தோட்ட கல்வி பணிப்பாளர் வடிவேல் ஆகியோர் இணைந்து இக் கட்டடத்தை திறந்து வைத்துள்ளனர்.

இக்கட்டடம் கல்வி அமைச்சின் 8.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு பாடசாலையின் கல்வி நடவடிக்கைக்கு வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

இந்த புதிய கட்டிடத்தில் நான்கு வகுப்பறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 5 இலட்சம் ரூபா செலவில் பாடசாலைக்கான தளபாடங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண உதவி கல்வி பணிப்பாளர், தோட்ட கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers