டிக்கோயாவில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்விடம் சுற்றி வளைப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் அனுமதிபத்திமின்றி மாணிக்க கல் மண்ணை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றினையும், மாணிக்க கல் அகழ்வு செய்யப்பட்டு வந்த இடத்தினையும் சுற்றிவளைத்துள்ளதாக ஹட்டன் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை காரியாலயத்தின் பின் புறமான காசல்ரி நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆற்றின் கரையோர பகுதியிலே சட்ட விரோதமாக மாணிக்கல் அகழ்விடம் சுற்றிவளைக்கப்பட்டதுடன், மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், நீர் இழுக்கும் இயந்திரம் என்பன மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட இல்ல மண்ணை நோர்வூட் பகுதியில் அனுமதிபத்திரம் பெற்று மாணிக்க கல் இல்லம் கழுவும் இடத்திற்கு கொண்டு சென்ற போதே குற்றத்தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட வேன் மற்றும் இல்ல மண் உபகரணங்கள் உட்பட கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் நாளைய தினம் ஹட்டன் நீதாவன் நீதிமன்றில் ஆஜர்படுத்வுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.