யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் ஏற்பட்ட விபரீதம் - மூவர் படுகாயம்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் அச்சுவேலி பிரதேசத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வேன் ஒன்று தடம் புரண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த 3 பேரும் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.