யாழில் கிணற்றில் தத்தளித்த அரிய வகை வெள்ளை நாகங்கள்! விவசாயிகளின் மனிதாபிமான செயல்

Report Print Kamel Kamel in சமூகம்

யாழில் விவசாயிகள் சிலர் கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த அரிய வகை வெள்ளை நாகங்கள் இரண்டை மீட்டு, பாதுகாப்பாக காட்டில் விட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகமொன்று மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டி நேற்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும்,

யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் வெள்ளை நாகங்கள் இரண்டு விழுந்து கிடந்ததனை விவசாயி ஒருவர் கண்டுள்ளார்.

விரைந்து செயற்பட்ட குறித்த விவசாயி ஏனைய சிலரின் உதவியுடன் நாகங்களை கிணற்றிலிருந்து மீட்டுள்ளார்.

மிகவும் அரிய வகையிலான வெள்ளை நாகங்கள் என்பதனால் அவற்றை பாதுகாப்பாக காட்டுப் பகுதியில் கொண்டு விடுவித்ததாகவும், இவற்றை யாழ். மக்கள் தெய்வங்களாகவே நோக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers