சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது மனைவியை தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எம்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சிறிதுவ,சேருநுவர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers