கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிக்கு விளக்கமறியல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - சாந்திபுரம் பகுதியில் கேரளா கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் திருகோணமலை - ரொட்டவெவ பகுதியைச்சேர்ந்த, 31 வயதுடைய நவா‌ஸ் நஸ்லிம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரின் முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போதே விற்பனைக்கு பொதி செய்யப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும் , ஏற்கனவே திருகோணமலை நீதிமன்றத்தில் கஞ்சா போதைப் பொருள் தொடர்பில் முன் குற்றங்கள் இருப்பதாகவும் நீதவான் முன்னிலையில் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மொரவெவ - ரொட்டவெவ பகுதியில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers