முன்பள்ளி பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீள்நியமனம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீள்நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் முன்பள்ளி பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.சசிகரன் தனது கடமையை இன்று பிற்பகல் 3.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் முகம்மத், முன்பள்ளி பணியகத்தின் அம்பாறை மாவட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர்களான எஸ்.எம்.புஞ்சிபண்டா, ஏ.எஸ்.எச்.சைபீடின் மற்றும் பணியகத்தின் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.