அங்கொட லொக்காவும் துபாயில் கைது!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் மற்றும் ஒரு போதைவஸ்து கடத்தல்காரரான மதுமகே சந்தன லசந்த பெரேரா என்ற அங்கொட லொக்கா, துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மதுஷ் என்ற போதைவஸ்து கடத்தல்காரர் ஹோட்டல் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது குறித்த ஹோட்டலில் இருந்த அங்கொட லொக்கா தப்பிச்சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இந்த சம்பவத்தின் பின்னர் சீசீடிவி கமராக்களை அவதானித்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது அங்கொட லொக்கா கைதுசெய்யப்பட்டார்.

அங்கொட லொக்கா பாரிய கொலைகள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்தவராவார்.

இவர் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட சமயன் என்ற பாதாள உலக தலைவரின் நண்பராவார். சமயனின் கொலையை அடுத்து இந்தியாவுக்கு தப்பிச்சென்ற அங்கொட லொக்கா பின்னர் அங்கிருந்து துபாயிக்கு சென்றுள்ளார்

இதேவேளை மதுஷ் உடன் ஹோட்டலில் இருந்தபோது கைதுசெய்யப்பட்ட 31 சந்தேகநபர்களில் பெரும்பாலானோர் போலியான கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.