காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் வித்தியாலயத்தின் அதிபர் சோ.சுந்தரமோகன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கொட்டும் மழையிலும், தேசிய கொடியேற்றல், ஒலிம்பிக்தீபம் ஏற்றல், மாணவர்களின் அணிநடை மரியாதையுடன் ஆரம்பித்த விளையாட்டுப் போட்டியில், அஞ்சல் ஓட்டங்கள், குறுந்தூர ஓட்டம் போன்ற மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளும், வேகநடை, அஞ்சல் ஓட்டம் போன்ற போட்டிகள் பழைய மாணவர்கள், பெற்றோர்களுக்காகவும் நடாத்தப்பட்டன.

காலச் சூழலுக்கு ஏற்ற வகையில் மூன்று இல்லங்களின் விநோத உடைப்போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராசா, பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் க.திவிதரன், பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Latest Offers