பதவியில் இருந்து நீக்கப்பட்ட பணிப்பாளர், அத்துமீறி அலுவலகத்தை கைப்பற்றினார்

Report Print Ajith Ajith in சமூகம்

பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜெயவர்த்தனபுர பொது வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் சுசித்த சேனாரத்ன இன்று வைத்தியசாலைக்குள் பிரவேசித்து பணிப்பாளர் அலுவலகத்தை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆங்கில இணையம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

இதன்போது அவருக்கு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பிரபாத் வீரவத்த, உட்பட்டவர்கள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே சுசித்த சேனாரத்ன பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.