வசதியற்ற 56 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 1997ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் வசதியற்ற 56 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

வசதியற்ற 56 மாணவர்களுக்கு இதன்போது கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 1997 நண்பர்கள் வட்டத்தினால் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்து வவுனியா மாவட்ட செலயகத்தின் மாவட்ட சிறுவர் சபையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வசதியற்ற பாடசாலை செல்லும் 56 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், உதவி மாவட்ட மேலதிக செயலாளர் நா.கமலதாசன், மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஜே.ஜெயகெனடி, மாவட்ட சிறுவர் சபை உத்தியோகத்தர்கள், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 1997 நண்பர்கள் வட்ட பழைய மாணவர்களான ந. செல்வக்குமார், மு. ஜெயக்குமார், வே.பிரகாஸ், க.கமலசீலன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

பெற்றோர்கள், மாவட்ட செலயகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம அலவலகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers