கடந்த பத்து நாட்களில் 3 பெண்கள், 4 இளைஞர்கள் உள்ளிட்ட 12 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை!

Report Print Rakesh in சமூகம்

நாட்டின் சில பகுதிகளில் கடந்த பத்து நாட்களில் 12 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தினந்தோறும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிடும் செய்திக் குறிப்புகளிலிருந்து வெட்டிக்கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

இளம் யுவதி ஒருவர் உட்பட 3 பெண்கள், 4 இளைஞர்கள் மற்றும் 5 குடும்பஸ்தர்கள் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பப் பிரச்சினை, காதல் பிரச்சினை, கடன் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட பகைமை காரணங்களினால் இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கொலைகளுடன் சம்பந்தப்பட்ட 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.