கோத்தபாயவை கடுமையாக எச்சரித்த நீதிபதிகள்!

Report Print Vethu Vethu in சமூகம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு விசேட நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோத்தபாய உள்ளிட்ட குழுவினரை உரிய நேரத்திற்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு விசேட நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது டீ.ஏ.ராஜபக்சவின் நினைவு அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச உட்பட குழுவினருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

வழக்கின் பிரதான சந்தேகநபரான கோத்தபாய ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த நிலையில் சற்று நேரம் தாமதமாக வந்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமையினால் தனது கட்சிக்காரரினால் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனை செவிமடுத்த நீதிபதிகள் குழாம் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.