மாடுகளை திருடி இறைச்சிக்காக அறுத்த நபர்கள் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை வரோதய நகர் பகுதியில் மாடுகள் இரண்டினை திருடி இறைச்சிக்காக அறுத்த சந்தேக நபர்கள் இருவரை இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.

புதுக்குடியிருப்பு, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் இரண்டு மாடுகளை திருடி இறைச்சிக்காக அறுத்துள்ளதாகவும், மாடுகள் வெட்டிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாகவும் தெரிவித்து மாட்டு உரிமையாளர் சந்தேக நபர்கள் தொடர்பாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Latest Offers