மிக மோசமான முறையில் நடந்துகொண்ட பொலிஸ் அதிகாரி! வைரலாகும் காணொளி

Report Print Murali Murali in சமூகம்

பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதுடன், தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்துச் சம்பவமொன்றின் பின்னர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த சிசிடிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அத்துடன், தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.