மாகந்துரே மதுஷை துபாய் சிறையில் வைப்பதே சிறந்தது! இராணுவ தளபதி

Report Print Murali Murali in சமூகம்

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக தலைவர்களுள் ஒருவரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்களை அந்நாட்டு சிறையில் வைப்பதே புத்திசாலித்தனமானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக்காட் கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த நபரை கைது செய்ததன் மதிப்பு நிச்சயமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கே உரியது எனவும் அவர் கூறியுள்ளார். மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்கள் அண்மையில் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில், மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்கள் கடந்த வாரம் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இராணுவ தளபதி,

“கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வந்தால் பல்வேறு தந்திரங்களைப் பிரயோகித்து சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கின்றன்.

இந்நிலையில், அந்நாட்டு சிறையில் வைப்பதே புத்திசாலித்தனமானது. பாதாள உலக கூட்டத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது

அண்மையில் பாதாள உலக கூட்டத்தை அடியோடு பிடிப்பதற்கும், போதைப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கும் முடியுமாகவுள்ளதற்கு எஸ்.ரி.எப். படைப் பிரிவின் கட்டளை அதிகாரி எம்.ஆர். லத்தீப் எடுக்கும் ஆர்வம் மிக முக்கியமானது.

இந்நிலையில், அவரது சேவைக் காலம் நீடிப்பு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers