அமால் பெரேரா உள்ளிட்ட 18 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர்

Report Print Kamel Kamel in சமூகம்

டுபாயில் அண்மையில் கைது செய்யப்பட்டவர்களில் பாடகர் அமால் பெரேரா உள்ளிட்ட 18 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தமை அம்பலமாகியிருந்தது.

டுபாய் காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

மேலும் எட்டு பேரிடம் கொக்கேய்ன் போதைப் பொருள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கடந்த 5ம் திகதி பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட பலரை டுபாய் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

டுபாயில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட, மதுஷ், அமால் பெரேரா உள்ளிட்ட 31 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாடகர் அமால் பெரேரா அவரது புதல்வர் நதிமால் பெரேரா மற்றும் நடிகர் ரயான் ஆகியோரை மீட்பதற்கு சட்டத்தரணி உந்துல் பிரேமரட்ன தலைமையிலான குழுவினர் டுபாய் சென்றுள்ளனர்.

இந்த கலைஞர்களுக்கு எதிராக போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் போதைப் பொருள் பயன்பாடு குறித்தே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எனவும் சட்டத்தரணி உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

Latest Offers