போதைப்பொருள் கடத்தல் விவகாரத்திலிருந்து தப்பிக்கும் மதுஷ்?

Report Print Kamel Kamel in சமூகம்

பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் மாகந்துரே மதுஷிற்கு எதிராக இலங்கையில் எவ்வித போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களும் கிடையாது என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுஷ் பாரியளவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் அவர் அவ்வாறு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மதுஷ் டுபாயிலிருந்து பாரியளவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தினால் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகம் தொடர்பில் இலங்கைப் பொலிஸாருக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மதுஷை கைது செய்ய முடியவில்லை.

தெற்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் டெனீ ஹீன்தெட்டிய படுகொலை மற்றும் ரணாலே சமயங் என்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் உள்ளிட்ட ஆறு பேரை படுகொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் மட்டுமே சாட்சியங்களுடன் மதுஷிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெனீ கொல்லப்பட்ட போது மதுஷ் நீர் கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும், சமயங் கொலை செய்யப்பட்ட போது மதுஷ் டுபாயில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு பாரிய குற்றச் செயல்கள் போதைப் பொருள் வர்த்தக சம்பவங்களுடன் மதுஷிற்கு தொடர்பு உண்டு என்ற போதிலும் அவை எதனையும் நிரூபிக்க சாட்சியங்கள் கிடையாது என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers