யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றிலிருந்து தொடர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ். பல்கலைக்கழக வளாக முன்றலில் இன்றைய தினமும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமது வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் கடந்த பரீட்சையின் போது சிறு சிறு குற்றங்கள் இழைத்தமையைக் காரணம் காட்டி ஒருவருட இடைக்கால வகுப்புத் தடையினை நிர்வாகம் விதித்துள்ளதாக தெரிவித்து குறித்த தொடர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட15 மாணவர்கள் மீதான இடைக்கால வகுப்புத் தடைக்கான காலம் மிகவும் அதிகமாக இருப்பதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், பொது மன்னிப்பு அடிப்படையில் அவர்களின் தண்டனை தொடர்பில் நிர்வாகம் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கு உரிய சாதகமான பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.