திருகோணமலையில் இடம்பெற்ற மோசமான படுகொலையின் நினைவு நாள்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் கடந்த 1996.02.11ஆம் திகதி அன்று நடந்த மோசமான படுகொலையின் 23ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந் நினைவு தினத்தை முன்னிட்டு மூதூரில் உள்ள நினைவிடத்தில் நேற்று மாலை உயிரிழந்தோரின் உறவுகளால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது விஷேட பூஜை வழிபாடுகளும் மலரஞ்சலிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரெட்ணசிங்கம் மற்றும் தொண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1996.02.11ஆம் திகதி அன்று மூதூரில் உள்ள கிளிவெட்டி குமாரபுரம் கிராமத்தில் படையினரால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிற இப்படுகொலையில் சிறுவர்கள் அடங்கலாக 26 பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.

Latest Offers