மதூஷ் குழுவினர் இந்த வாரத்தில் நீதிமன்றத்தில்

Report Print Ajith Ajith in சமூகம்

துபாயில் கைதுசெய்யப்பட்ட போதைவஸ்து கடத்தல்காரர் மதூஷ் உட்பட்டவர்கள் தொடர்பில் ஆரம்ப விசாரணைகள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில் அவர்கள் இந்த வார இறுதியில் நீதிமன்றத்தில்முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மதூஷ் உட்பட்டவர்களின் கைதுடன் இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ்அமையம் தொடர்புப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கைதுகள் துபாய் மற்றும் இலங்கையின் காவல்துறை ஒத்துழைப்பின்அடிப்படையிலேயே இடம்பெற்றதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் மதூஷ் தொடர்பில் இன்டர்போலுக்கு இலங்கை காவல்துறையினரால் நீல அறிக்கை ஒன்று மாத்திரம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நீல அறிக்கை என்பது ஒருவரின் அடையாளத்தை நிரூபித்துக்கொள்ள மேலதிக தகவல்களை கோரும் அறிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers