இலங்கையில் கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்! திடீரென மாயமானதால் கவலையில் மக்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

புத்தளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக உப்பு உற்பத்தி பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக பெய்த அடைமழை காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது.

நாட்டில் நிலவிய சீரான காலநிலையினால் உப்பு உற்பத்தி நல்ல விளைச்சலை கொடுத்திருந்தது. எனினும் பெய்த அடைமழை காரணமாக அனைத்தும் அழிந்து போயுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நல்ல உப்பு விளைச்சல் காரணமாக பெருந்தொகை வருமானத்தை பெற்று வந்த நிலையில், இயற்கையின் சீற்றம் காணரமாக கிடைத்த அதிர்ஷ்டம் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தளம், சோல்டன், ஆனகுத்துவ உட்பட பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டமையினால் உப்பு உற்பத்தி முழுமையாக அழிவடைந்துள்ளது.

Latest Offers