ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரித்தானியா

Report Print Ajith Ajith in சமூகம்

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நான்கு நாடுகளின் முக்கிய குழு யோசனைகளை முன்வைக்கவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஏற்பாட்டுக் குழு கூட்டம் நேற்று இடம்பெற்றபோது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதி ஜூலியன் பிராய்த்வெய்டி தலைமையில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் கனடா, ஜேர்மனி, மெசடோனியா, மற்றும்மொன்டிக்ரோ ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் யோசனையை முன்வைப்பதென்று இந்தப்பிரதிநிதிகள் முடிவெடுத்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியதன் பின்னர் பிரித்தானியா முன்னணி நாடாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers