தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 3,850 பேரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுக

Report Print Rusath in சமூகம்

அரசாங்கப் பாடசாலைகளில் நியமிப்பதற்காக கடந்த வருடம் (2018) ஜுன் மாதம் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 3850 பேரின் பெயர்ப் பட்டியல்களை கல்வி அமைச்சு வெளியிட வேண்டும் என அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கம் மத்திய கல்வி அமைச்சுக்கும் மாகாண சபைகளுக்கும் இன்று விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கப் பாடசாலைகளில் நிலவும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் வெற்றிடத்திற்கு இணைத்துக் கொள்வதற்காக 3850 உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த வருடம் (2018) ஜுன் மாதம் அரசு கூறியது.

ஆயினும், இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் ஒட்டு மொத்தப் பெயர்ப்பட்டியலும் தற்போது 8 மாதங்கள் கடந்து விட்டபோதிலும் இன்னமும் வெளியிடப்படவில்லை.

இதனால் இந்நியமனம் தொடர்பான பரீட்சைகளுக்குத் தோற்றிய நிலையில் நிமயனத்தை எதிர்பாரத்துக் காத்திருக்கும் விண்ணப்பதாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதோடு ஏமாற்றத்துக்கும் முகம் கொடுத்துள்ளனர்.

மேலும் வேறு நியமனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாமலும் தடுமாறுகின்றனர்.

எனவே, இது தொடர்பாக மத்திய அரசின் கல்வி அமைச்சு உடன் கரிசனைக்கு எடுத்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் அனைவரினதும் பெயர்ப்பட்டியலை பொதுவில் வெளியிட வேண்டும் என அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

Latest Offers