நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை மின்சார சபை அசமந்தம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் கிராமத்தின் ஒரு பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் மின்சார சபைக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்கந்தபுரம் கிராமத்தில் ஒரு வீதி சீரமைப்பின் போது கனரக இயந்திரம் மூலம் வீதியின் இரு புறமும் வெட்டப்பட்டதன் காரணமாக மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் குறித்த பிரதேசத்தின் மின்சாரம் கடந்த சனிக்கிழமை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.

அன்று தொடக்கம் இன்று வரை கிளிநொச்சி மின்சார சபைக்கு பொது மக்களால் அறிவித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இந்த நிலைமை காரணமாக வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி மின்சார சபையினரிடம் எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது,

குறித்த பணிகளை இன்று மேற்கொள்கின்றோம். எங்களிடம் பாரம் தூக்கி இல்லாததன் காரணமாக கடந்த சில நாட்களாக பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers