கிழக்கு மாகாண ஆளுநரை அழைத்து குறைகளைக் காண்பிக்க முயற்சி

Report Print Rusath in சமூகம்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை மீராவோடை வைத்தியசாலைக்கு அழைத்து வந்து அங்கு காணப்படும், ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் அஷ்ஷேஹ். எம்.எம்.எஸ். ஹாறூன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மீராவோடை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கும் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருக்கும் இடையில் இன்று அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில், கருத்து தெரிவித்த ஹாறூன் மேலும் கூறியதாவது,

வாழைச்சேனை மற்றும் மீராவோடை வைத்தியசாலைகளுக்கு எனது அழைப்பினையேற்று மிக விரைவில் கிழக்கு ஆளுநர் விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

ஆளுநரின் விஜயத்தின்போது, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரையும் அழைத்து வருவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அச்சந்திப்பில் மீராவோடை வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகள் அனைத்தினையும் கேட்டறிந்துகொண்டு இயன்றளவு முடியுமான தீர்வினை பெற்றுத் தருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் என்னிடம் தெரிவித்துள்ளார்' என்றார்.

இச்சந்திப்பில் அபிவிருத்திக் குழுவினரால் வைத்தியசாலைக்கு ஆளுநரை அழைத்து வருவதற்கான கோரிக்கை அடங்கிய கடிதமும் கையளிக்கப்பட்டுள்ளது.

Latest Offers