தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்த கோரி கையெழுத்து வேட்டை

Report Print Thirumal Thirumal in சமூகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தக்கோரி டிக்கோயா, இன்வெரி தோட்டத்தில் மலையக இளைஞர்கள் அமைப்பு கையெழுத்து வேட்டை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக உயர்த்தகோரியும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினை அம்சங்களை செய்து கொடுக்க வேண்டும் என கோரியும் மலையக இளைஞர்கள் அமைப்பு இந்த கையெழுத்து வேட்டை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினை அம்சங்களை செய்து கொடுக்க வேண்டும் என கோரியே, மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும், தோட்டங்களிலும் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மக்கள் மகஜர் ஒன்றை தயாரித்து சேகரிக்கப்படும் கையெழுத்துக்களையும் இணைத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர், இந்திய உயர்ஸ்தானிகர் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers