தாதியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைக்கு வழக்கு ஒத்திவைப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சென்ற மாதம் 28.01.2019 அன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் தாதி ஒருவர் தொடர்பில் ஹட்டன் நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட முதலாவது வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான நீதியான விசாரணை முன்னெடுக்க முறையாக விசாரணைகளை மேற்கொண்டு சரியான சாட்சி பதிவுகளுடன் நீதிமன்றத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முன்னிலைப்படுத்த வேண்டும் என ஹட்டன் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்த தலவாக்கலை - வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேச தாதி ஒருவரே மரணம் எய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers