பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கத்தியால் குத்தப்பட்ட பெண்

Report Print Vethu Vethu in சமூகம்

வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற இடத்தில் பெண்ணின் மீது கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் நிலையத்தில முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரிக்க அழைக்கப்பட்ட நபருடன் வந்த பெண்ணை, இன்னொரு நபர் குத்தியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் நடந்துள்ளது.

இதனால் படுகாயமடைந்த பெண் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைக்கால பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் பணி செய்யும் ஜீ.யோகவானி என்ற 40 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த பெண், அவருடன் இணைந்து வாழும் நபர் மற்றும் இன்னுமொரு நபருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணை இடம்பெற்ற போதே பெண் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுடன் பல வருடங்கள் வாழ்ந்த நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டு பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest Offers