வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் வயலுக்கு சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று மதியம் 2 மணியளவில் வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவரது உறவினர்கள் சந்தேகமடைந்து தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த நபரை வயல் பகுதியில் சடலமாக கண்டுள்ளனர். ஆறுமுகத்தான் புதுக்குளத்தை சேர்ந்த நல்லையா இராசேந்திரம் (வயது-44) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
ஓமந்தை பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.