பாடசாலையின் அபிவிருத்தி சம்பந்தமான கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - மூதூர் அல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் எஸ்.மஜுன் உட்பட பாடசாலை பிரதி அதிபர் அடங்கிய குழுவொன்று கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாவை சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி சம்பந்தமான கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு ஆளுநரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது பாடசாலையின் பௌதீக வளப் பற்றாக்குறைகள்,பாடசாலைக்கு தேவையான கட்டிட வசதிகள், மலசலகூட வசதிகள் மற்றும் பாடங்களுக்கான ஆசிரியர்கள் தொடர்பான விபரங்கள் என்பன மகஜரில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இயலுமான வரையில் முடிந்தளவு உதவிகளை இதன் போது நிறைவேற்றித் தருவதாகவும் ஆளுநர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதன்போது பாடசாலை அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்களும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...