திருகோணமலையில் பிரத்தியேக வகுப்பிற்கு தடை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இரவு 7 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை நகராட்சி மன்றத் தலைவர் என். ராஜநாயகம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பெற்றோர்களாலும் சமூக நலன் விரும்பிகளாலும் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களின் அடிப்படையில் நகராட்சி மன்ற விசேட அமர்வின் போது இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரவு வேளைகளில் மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் போது பிழையான வழிகளுக்கு செல்ல சந்தர்ப்பங்கள் உள்ளனவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு நகராட்சி மன்றப் பகுதிக்குள் நடைபெறும் இரவு நேர வகுப்புகளை ஏனைய உள்ளூராட்சி சபைகளில் நிறுத்தியது போல இங்கும் நிறுத்தப்பட வேண்டுமென திருகோணமலை நகராட்சி மன்றத்தில் நடைபெற்ற விசேட சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் சகல ஆசிரியர்களுக்கும் அறிவிக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இதை நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் என். ராஜநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...