ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் இலங்கை வந்த இந்திய பிரஜை கைது!

Report Print Steephen Steephen in சமூகம்

5, 000 ரூபாய் இலங்கை நாணயத்தாள் தொகை ஒன்றை சட்டவிரோதமாக எடுத்து வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இந்த நபரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் நேற்று மதியம் 12.45 அளவில் மதுரையில் இருந்து கட்டுநாயக்க வந்த ஸ்பைசி ஜெட் விமானத்தில் இலங்கை வந்துள்ளார்.

சந்தேக நபர் எடுத்து வந்த பயணப் பொதியில் 7 லட்சம் ரூபாய் பெறுமதியான 140 ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களை மறைத்து எடுத்து வந்துள்ளார். இந்திய பிரஜையிடம் இருந்து கைப்பற்றிய பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

Latest Offers