வெளிநாட்டில் வசித்து வரும் கொழும்பை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் நெகிழ்ச்சியான செயல்

Report Print Ajith Ajith in சமூகம்

ஓமானில் வசிக்கும் தமிழ் குடும்பம் ஒன்று இலங்கையின் போரின் போது வலுவிழந்த படைவீரர் ஒருவருக்கு வீடு ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளது.

வாதுவையை சேர்ந்த ரந்திக்க சத்துரங்க என்ற இந்த படைவீரர், 2006ஆம் ஆண்டு முகமாலையில் இடம்பெற்ற போரின் போது அங்கவீனமானார்.

இந்த நிலையில் ஓமானில் வசிக்கும் கொழும்பு - ஹெவ்லொக் டவுனை சேர்ந்த மோஹனசங்கரும், அவரின் மனைவியுமே இந்த வீட்டை அன்பளிப்பு செய்துள்ளனர்.

இதனை அண்மையில் யாழ்ப்பாண படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன் ஹெட்டியாராச்சி பயனாளிக்கு வழங்கியுள்ளார்.

ஏற்கனவே இந்த தம்பதியினர் வடக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள 7 பேருக்கு வீடுகளை அன்பளிப்பு செய்துள்ளனர்.

Latest Offers