100 வருட லயன் அறை இடிந்து விழும் அபாயம்! 51 பேர் அவசரமாக இடமாற்றம்

Report Print Ajith Ajith in சமூகம்

100 வருடங்கள் பழமை வாய்ந்த லயன் அறை இடிந்துவிழும் ஆபத்து காரணமாக பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தின் 12 குடும்பங்களை சேர்ந்த 51 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த லயன் அறை முழுமையாக மக்கள் வாழமுடியாத நிலைக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பணிகளில் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

அதுவரை தங்கியிருப்பதற்காக குறித்த குடும்பங்களுக்கு தற்காலிக கொட்டகைகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.

Latest Offers