அக்கராயன்குளத்தின் கீழ் 2790 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி, அக்கராயன்குளத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கை 2790 ஏக்கரில் மேற்கொள்ளப்படுமென சிறுபோக குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சி.சத்தியசீலன் கலந்து கொண்டு கருத்துரைத்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

பயிர்ச் செய்கையில் விவசாயிகள் நடைமுறை ஒழுங்குகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பது அவசியம்.

கடந்த இரு ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டம் வறட்சியான சூழலை எதிர்கொண்டது. பயிர்ச் செய்கைகள் கூட பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன.

இந்த நிலையில் தற்போது குளங்களின் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன.

குளங்களின் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி சிறந்த முறையில் சிறுபோக நெற்செய்கையினை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் அக்கராயன்குளத்தின் கீழ் 2,790 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Latest Offers