கந்தளாயில் வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரண்டு வாகனங்களும் வேகமாக சென்று வளைவொன்றில் மோதியமையினால் இன்று இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளை செலுத்திய 24 வயதுடைய நபர் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

முச்சக்கர வண்டியின் சாரதியை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers