இலங்கையில் 191 பேரின் உயிரை பறித்த கன்னியர் மலை! 45 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

மஸ்கெலியாவில் அமைந்துள்ள ஏழு கன்னியர் மலையை பார்வையிடுவதற்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் – மஸ்கெலியா ஊடாக சிவனொளிபாத மலை வீதியில் 7 கன்னியர் மலை அமைந்துள்ளது.

எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக அம்பகமுவ பிரதேச சபை தலைவர் ஜயசங்க பெரேரா தெரிவித்தார்.

1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி குறித்த ஏழு கன்னியர் மலையில் இந்தோனேஷியாவின் விமானமொன்று மோதி விபத்திற்குள்ளானது. இதில் 191 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers