திருகோணமலை - ரொட்டவெவ முஸ்லிம் மஹா வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்களின் "சிறுவர் சந்தை" இன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
சிறார்கள் மத்தியில் பணக்கொடுக்கல் வாங்கல்களை விருத்தி செய்யும் நோக்கில் இந்த சந்தை வியாபாரம் இடம்பெற்றதுடன் ஆரம்ப பிரிவிற்கு பொறுப்பான ஆசிரியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பாடசாலை உபகரணங்கள், குளிர் பானங்கள், உணவு பண்டங்கள், மரக்கறி வகைகள் என்பன விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
ரொட்டவெவ முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் இறுதியாக சிறுவர் சந்தை நடத்தப்பட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
நிகழ்வில் மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் எம்.அமான், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.