கோணாவில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு பாடசாலைச் சீருடை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மண்டபத்தில் இன்று முற்பகல் அதிபர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவர்களுக்கான சீருடைகள் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதனின் நிதியில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன, கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்க, கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனபால, பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.